Advertisement

Donate

தினகரன் செய்தி எதிரொலி : பிச்சை எடுத்து மகளை படிக்க வைத்த தந்தைக்கு உதவிகள் குவிகிறது 

தினகரன் செய்தி எதிரொலி : பிச்சை எடுத்து மகளை படிக்க வைத்த தந்தைக்கு உதவிகள் குவிகிறது



மதுரை: தமிழ்முரசு, தினகரன் செய்தி எதிரொலியால் மதுரையில் பிச்சை எடுத்து மகளை பிளஸ் 2 படிக்க வைத்த தந்தைக்கும், மகளுக்கும் உதவிகள் குவிகின்றன. மகளை ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதற்கான உத்தரவு மற்றும் பண உதவியை
யும், தந்தைக்கு வீடும் கலெக்டர் காமராஜ் வழங்கினார்.


சேலம் மாவட்டம் இடைப்பாடியைச் சேர்ந்தவர் குமார். கட்டுமான தொழிலில் ஈடுபட்டபோது 2005ம் ஆண்டு விபத்தில் இரு கால்களையும் இழந்தார். இதையடுத்து இவரின் 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு குமாரின் மனைவி பிரிந்து சென்று விட்டார். பிழைப்புக்கு வழியின்றியும், மனைவி பிரிந்து சென்ற அவமானத்தாலும் 3 குழந்தைகளுடன் தவித்த குமார் சில ஆண்டுக்கு முன் மதுரைக்கு வந்தார். சவுராஷ்டிராபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் குமார் மதுரையில் வேலை கேட்டு அலைந்தார். ஆனால், வேலைக்குப் பதிலாக ஏமாற்றமே கிடைத்து.
பெட்டிக்கடை வைக்க உதவி கேட்டு மாவட்ட மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பித்தும் அவரது மனு ஏனோ ஏற்கப்படவில்லை. இதனால் வறுமையால் தவித்த குமார் குழந்தைகளை காப்பாற்ற பிச்சை எடுக்கத் தொடங்கினார். மதுரை அண்ணாநகர் ஆரோக்கிய அன்னை ஆலயம் முன் மூன்று சக்கர சைக்கிளில் அமர்ந்து பிச்சை எடுத்து வரும் குமார், அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது மூத்த மகள் மீனாவை மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மீனா 914 மதிப்பெண் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். குமாரின் 2வது மகள் 10ம் வகுப்பும், மகன் 4வது வகுப்பும் படிக்கின்றனர்.
குமார் மற்றும் அவரது மகளின் நிலை குறித்து தமிழ்முரசு, தினகரன் நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதையடுத்து இவர்களுக்கு உதவிகள் குவியத் தொடங்கின. உதவிகள் செய்வதற்கு வாசகர்கள் பலர் போட்டி போட்டிக்கொண்டு தொலைபேசி மூலம் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வருகின்றனர்.
குமாரின் நிலை குறித்து தமிழ்முரசு, தினகரன் மூலம் அறிந்த மதுரை கலெக்டர் காமராஜ், அவரையும் மகள் மீனாவையும் நேற்று நேரில் அழைத்தார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் மீனா சேர்ந்து படிப்பதற்கான நடவடிக்கை எடுத்தார். மேலும், வடமலையான் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் மீனாவின் இரண்டு ஆண்டு படிப்பு செலவுக்கான நிதி வழங்கப்பட்டது. அதை மீனாவிடம் கலெக்டர் வழங்கினார். குமாருக்கு குடிசைமாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கவும், ரேஷன் கார்டு வழங்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
கலெக்டர் கூறுகையில், ‘தினகரன் செய்தியை படித்தவுடன் அதிகாரியை அழைத்து விசாரித்தேன் மாணவிக்கும், குமாருக்கும் தேவையானவற்றை தெரிந்து வருமாறு கூறினேன். மாணவிக்கு தேவையான படிப்பு செலவை வடமலையான் மெமோரியல் டிரஸ்ட் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஏற்க முன்வந்துள்ளன’ என்றார்.  
மீனா கூறுகையில், ‘வறுமையால் வாழ்க்கையில் திக்குத் தெரியாமல் இருந்த எனக்கு தமிழ்முரசு, தினகரன் நாளிதழ்கள் மூலம் ஆசிரியர் பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி வீடு,
வாசல் இல்லாமல் வீதியில் வாழ்ந்த எங்களுக்குகலெக் டர் வீடு ஒதுக்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன் றியை தெரிவிக்கிறோம். எங்களுக்கு வாழ்வளித்த தமிழ்முரசு, தினகரன் நாளிதழ்களுக்கு எங்கள் குடும்பம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்‘ என்றார்.
உதவி செய்ய விரும்புவோர் மாணவி மீனா, த/பெ.சரவணக்குமார், 4வது தெரு, சவுராஷ்டிராபுரம், வண்டியூர், மதுரை&20 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: